புதன், 27 பிப்ரவரி, 2008

காதலுடன் என்றும் நான்

தோளில் நீ சாய்கையில்
சில்லென்று ஒரு தென்றலும்
என்னை சுற்றி சுழன்றது,
என் கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா நீ?
உன் நினைவுகள்
என்னுள் கலந்திட,
வெறுமை அனலாய் எரித்திட
காதலுடன் என்றும்
நான்!

1 கருத்து:

senthil சொன்னது…

உன் காதலை உணரிந்திட நான் என்னை மறந்தேன்!!
என் மனதில் என்றும் உன் வாசத்தோடு வசிக்கிறேன்!!
அன்புடன் உன் தோழனாய்,
உன்னுள் ஒருவனை,
உன்னகென இருப்பேன்!!