திங்கள், 22 நவம்பர், 2010

நினைவுகள் மட்டுமாவது...

உறங்க விருப்பம் இல்லா இரவுகளில்
உன் நினைவுகளின் நிழல்கள்!
கண் மூடி உறக்கம் தழுவும் நாட்களில்
உன் நினைவுகளின் வசிப்பிடங்களில்
தொலைந்து விடுகிறேன்!


ஒரு பொழுதின்,
ஒரு மணி நேரத்தில் மட்டுமாவது
உன் நினைவுகள் என்னை
சீண்டாமல் இருப்பதில்லை ! 


நாட்கள் வாரங்களாகி ,
மாதங்களாக முடிந்து,
வருடங்களாய் நம்மைகடந்து விட்டன!
மாறாதது உன் நினைவுகள்! 


அவை மட்டுமாவது என்னுடனே இருக்கட்டும்